விழுப்புரம் :செஞ்சி அருகே பூரிகுடிசை கிராமத்தில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் “பனைக்கனவு” திருவிழா நேற்று தொடங்கியது
இதையொட்டி காலையில் பறை இசைத்தும், சிலம்பம் சுற்றியும், தப்பாட்டம் ஆடியும் ஊர்வலமாக சென்ற பனையேறி தொழிலாளர்கள் பனை மரத்திற்கு பூஜைகள் செய்து குலதெய்வ வழிபாடு நடத்தி திருவிழாவைத் தொடங்கினர்.
பனைபொருட்களால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இவ்விழாவில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் பனை உணவுப்பொருட்கள் மற்றும் பனை பொருட்களால் செய்யப்பட்ட கூடைகள், பொம்மைகள், அலங்கார மாலை உள்ளிட்ட பலவிதமான கைவினைப் பொருட்கள் கணகாட்சியில் இடம் பெற்றன.