உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விழுப்புரம் இ.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தமிழன்னை, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் போன்று வேடமிட்டு, போர் வீரர்களின் வெற்றி முழக்கத்தோடும் பறை இசை தாளத்தோடும் இன்று பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தமிழரின் பெருமை, தொன்மை, வீரம், பண்பாடு, கலாசாரம் போன்ற சிறப்புகளைப் பறைசாற்றும் வகையில் உள்ள இந்த மாபெரும் பேரணியை தொடங்கிவைத்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் எனத் தெரிவித்தார்.
தமிழ் கலாசாரத்தைக் கண் முன் நிறுத்திய பேரணி! - தமிழ் கலாசாரத்தை கண்முன் காட்டிய பேரணி
விழுப்புரம்: தமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்தப் பேரணியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிவன், பெருமாள், விநாயகர், முருகன், போன்ற கடவுள் வேடங்களிலும் பலர் தமிழ் மன்னர் வேடங்களில், இலக்கியக் காட்சிகளை நடித்துக் காட்டி ஊர்வலத்தை அழகாக்கினர். மேலும் மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைப் பிடித்துச் சென்றது கண்களை கவரும் விதமாக இருந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்தப் பேரணி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளூர் சிலை அருகே முடிவடைந்தது.
இதையும் படிங்க:'காலகேயனின் கிளிக்கி மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்' - கார்க்கியின் இணையதளத்தை வெளியிட்ட ராஜமெளலி
TAGGED:
உலக தாய் மொழி தினம்