விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (47). இவர், மின்வாரிய ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று காலை(ஆக.3) மொடையூர் பகுதியிலுள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறி பழுதை ராஜேந்திரன் சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக, திடீரென அவர் மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே சக ஊழியர்கள், பொதுமக்கள் ராஜேந்திரனை மீட்டு செஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உள்ள மருத்துவர்கள் ராஜேந்திரனை பரிசோதனை செய்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.