விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கான உடல்தகுதி தேர்வு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு முடிந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடக்கம்! - தமிழ்நாடு காவலர்கள்
விழுப்புரம்: மழையால் ஒத்திவைக்கப்பட்ட பெண்களுக்கான இரண்டாம் நிலை உடற்தகுதி தேர்வு விழுப்புரத்தில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பெண்களுக்கான முதற்கட்ட உடற்தகுதி தேர்வு முடிந்து இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு கடந்த 28ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க 984 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அன்றைய தினம் விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (டிசம்பர்3) பெண்களுக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் 100, 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், பந்து எறிதல், குண்டு எறிதல் போன்ற உடல் தகுதி சோதனைகள் நடைபெற்றது. இதனை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.