தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலி குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்ட பெண்கள் - Villupuram Latest News

விழுப்புரம்: குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்கக்கோரி கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலி குடங்களுடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.

Women besieging the governor's office with empty buckets
Women besieging the governor's office with empty buckets

By

Published : Aug 17, 2020, 10:51 PM IST

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ளது சின்ன குச்சிபாளையம். இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு கடந்த சில மாதங்களாகவே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரில் சென்று முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று (ஆக.17) காலி குடங்களுடன் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்த்து வைக்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அவர்கள் மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details