விழுப்புரம் அருகே உள்ள அவலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா (40). இவருக்குச் சொந்தமான வீட்டை இவரது உறவினர்கள் இடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அர்ச்சனா அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அர்ச்சனா இன்று (நவ. 09) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அங்கிருந்த காவல் துறையினர் அவரை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உடனடியாக அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் புகார் மனு அளிக்கவந்த பெண் ஒட்டந்தலை எனப்படும் நஞ்சு இலையை சாப்பிட்டது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வீழ்வது தொழிலாளர் விரோதப்போக்காக இருக்கட்டும்; வெல்வது தொழிலாளர்களின் ஒற்றுமையாக இருக்கட்டும்!'