தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத்தேர்வில் தோல்வி... கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை! - கிணற்றில் விழுந்த பெண்

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஸ்வரி(17)

By

Published : Oct 11, 2019, 6:21 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பொற்படாகுறிச்சி பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் ராஜேஸ்வரி(17). பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த இவர், அதற்கு பின் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி வெளியில் சென்ற ராஜலட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

கிணற்றில் விழுந்த பெண்ணின் சடலம் மீட்பு

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவியை அக்கம் பத்தத்தில் தேடிவந்த நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று காலை அவர்களது வயற்காட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் சடலமாக இருந்த பெண்ணை மீட்டு உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கள்ளக்குறிச்சி காவல் துறையினர், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த ராஜேஸ்வரி, ஏற்கனவே, மன அழுத்தத்தினால் பாதிக்கபட்டு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், இதனால் பாதிப்படைந்து அவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தங்களது முதற்கட்ட விசாரணை மூலம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

தாயை பிரிந்த குட்டியானை - தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை தோல்வி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details