விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் தாலுகா, மன்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி (32). இவர் தொடர்ந்து சட்டவிரோதமாக சாராயம் விற்று வந்துள்ளார். இவர் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கள்ளச் சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது! - விழுப்புரம் போலீஸ்
விழுப்புரம்: சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்றுவந்த பெண்ணை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெண் குண்டர் சட்டத்தில் கைது
எனவே இவர் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன் பேரில் சாந்தி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.