காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஜடி விசரித்து வந்த நிலையில், நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர காவல்துறையினர் முகிலனை கைது செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆந்திர காவல்துறை நேற்றிரவே தமிழ்நாடு காவல்துறையிடம் முகிலனை ஒப்படைத்தனர். காட்பாடி ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு வேலூர் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். பின்னர் முகிலன் நள்ளிரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
முகிலனை பார்க்க சென்ற மனைவி பூங்கொடியின் கார் விபத்து அதன்பின் முகிலனின் மனைவி பூங்கொடி, முகிலனை பார்பதற்காக இன்று காலை ஈரோடிலிருந்து சென்னை சென்றபோது, கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் கார் டயர் வெடித்து சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.