தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன்?... சிவி சண்முகம் கேள்வி - பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

அமைச்சர் பி.டி.ஆர் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்து ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 1, 2023, 7:11 PM IST

அமைச்சர் பி.டி.ஆர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன்?... சிவி சண்முகம் கேள்வி

விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை குறைந்துள்ளதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் பச்சை பொய்யைக் கூறி வருகிறார். எங்கே பார்த்தாலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 26, 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தபோது வடமாநிலத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் சிறுமியை 4 சிறுவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். முதலமைச்சர் வருகையின்போது நடைபெற்ற சம்பவத்தை காவல் துறையினர் மூடி மறைத்துள்ளனர். ஏன் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

''சிறுவர்கள் பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வந்து தொழில் புரிவோருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் உள்ளது. நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளிவந்துள்ளது.

அதில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணத்தைச் சேர்த்து வைத்துள்ளார்கள். அதனை எதில் முதலீடு செய்ய வேண்டும் எனப் புரியாமல் உள்ளதாகவும், ஆடியோ விவகாரம் குறித்து ஏன் முதலமைச்சர் மறுப்புத் தெரிவிக்கவில்லை? ஆடியோ வெளியிட்டவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

''பட்ஜெட்டில் 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயில், 30 ஆயிரம் கோடியை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கொள்ளை அடித்துள்ளார்கள். மொத்த பட்ஜெட் நிதியில் 10 சதவீதத்தை கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் பேனாச் சின்னம் அமைக்கவுள்ளனர். கொள்ளையடிப்பதற்காகத் தான் பேனாச் சின்னமா என்று மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.

உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை விட கொள்ளையடிப்பதில் மிஞ்சி இருக்கிறார், ஸ்டாலின். தொடர்ச்சியாக மக்கள் விரோத நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு இயற்றாத மசோதாவை ஒரு மாநில அரசு செய்கிறது என்றால் தொழிலாளர்களைப் பழிவாங்கும் செயல் இது. கருணாநிதியை விட ஸ்டாலின் அடித்த கொள்ளை தான் அவர் இரண்டு ஆண்டு காலம் செய்துள்ள சாதனை. ஜி ஸ்கொயர் பணப் பரிவர்த்தனை குறித்தும் குற்றப் பின்னணி குறித்தும் மத்திய அரசு விசாரிக்க வேண்டும்'' என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக கூட்டணியில் அதிமுக உள்ளதாகவும், இந்த அரசு கோமாளி, துக்ளக் அரசு என்றும், அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்தவர் அம்மா என்றார். ''அதிமுக அரசு பெண்களுக்கு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை தொலைத்து, மறைத்து திருமணம் செய்யும் மணமக்களுக்கு பிராந்தி, பீர் பாட்டில், கொடுக்கும் திட்டத்தை கொண்டு வருகிறது, இந்த திமுக அரசு. இதுதான் இந்த திமுக அரசின் லட்சணம், இதுதான் இவர்கள் சாதனை'' என்றும் விமர்சித்தார்.

''அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து இருந்து வருகிறது. சட்டம் போட வேண்டியது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் உடனே பின்வாங்குவதை தான் ஸ்டாலின் அரசு கொண்டுள்ளது’ என சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Koovagam Festival: களைகட்டிய கூவாகம் திருவிழா.. முதல் பரிசை தட்டிச்சென்ற பிரகதி!

ABOUT THE AUTHOR

...view details