தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீங்கள் பொதுசேவையில் விருப்பமுள்ளவரா? - ஊர் காவல்படையில் வேலைவாய்ப்பு - ஊர்காவல்படையில் வேலைவாய்ப்பு

விழுப்புரம்: மாவட்ட ஊர் காவல் படையில் மண்டலத் தளபதி பணி நியமனத்துக்கு மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

By

Published : Feb 26, 2020, 7:36 AM IST

விழுப்புரம் மாவட்ட ஊர் காவல்படையில் மண்டலத் தளபதி பணி நியமனத்துக்கு மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், " விழுப்புரம் மாவட்ட ஊர் காவல்படையில் மண்டலத் தளபதி பணி நியமனத்துக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இந்தப் பதவிக்கு தனியார் தொழில் நிறுவன அதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் என ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்பவர்கள் 20 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராகவும் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "பொதுநல சேவை மற்றும் தன்னார்வ தொண்டு செய்வதில் விருப்பம் உள்ளவராக இருத்தல் அவசியம். இப்பதவிக்கு முன்னாள் ஊர் காவல் படையினர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை. அதற்கான விண்ணப்பப் படிவத்தினை விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நேரிடையாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழ், கல்வி தகுதிக்கான சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவ அதிகாரியிடம் பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் சுயவிவர ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து எதிர்வரும் மார்ச் 3ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இதையுடன் படிங்க; 21 அரிவாள் மீது 68 முறை‌‌ நடந்து அருள்வாக்கு கூறிய பூசாரி

ABOUT THE AUTHOR

...view details