தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்புக்கு மத்தியில் குடிநீர் ஆலை; தடுத்து நிறுத்த ஆட்சியரிடம் கோரிக்கை - water problem in tamil nadu

விழுப்புரம்: விராட்டிகுப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு இடையில் அமைய உள்ள, குடிநீர் ஆலையை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

By

Published : Feb 10, 2020, 5:28 PM IST

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள விராட்டிகுப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலி மனையில், தனி நபர் ஒருவர் வீட்டுக்கு வாங்கிய மின் இணைப்பைப் பயன்படுத்தி மூன்று ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, குடி தண்ணீர் ஆலை அமைக்கும் பணியை செய்து வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் கோரிக்கை

தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கருதிய அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர், இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். மேலும் நிலத்தடி நீர் மாசுபட்டு கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் மாவட்ட ஆட்சியர், மின் பொறியாளர் நேரில் வந்து ஆய்வு செய்து குடிநீர் ஆலை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மாநகராட்சி குடிநீர் குழாயில் சோப்பு போட்டு குளித்த சமூக ஆர்வலர்...

ABOUT THE AUTHOR

...view details