விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட திருநாவலூர் காவல் நிலையம் எல்லைப்பகுதியில் பைக் திருட்டு சம்பவத்தைத் தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி திருநாவலூர் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைத்து உதவி ஆய்வாளர்கள் பரணிதரன், நந்தகோபால் ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
போலீசாரின் தீவிர வாகன சோதனையில் சிக்கிய பலே திருடர்கள்! - பைக் திருடர்கள்
விழுப்புரம்: வாகன சோதனையின்போது மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆறு பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறாஇயினர், அதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உளுந்தூர்பேட்டை - பண்ருட்டி, கடலூர் செல்லும் சாலையின் நடுவே கெடிலம் பேருந்து நிலையத்தில் வாகன சோதனை மேற்கொண்டபோது இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் அதிவேகமாக வந்ததாகவும் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொன்னதால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் திருக்கோவிலூர் அடுத்த காட்டுப்பையூரைச் சேர்ந்த விஜயகுமார், உளுந்தூர்பேட்டை அடுத்த புது நன்னவாரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் ஆகிய இருவரும் பைக் திருடுவதை ஒரு தொழிலாகச் செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடம் இருந்து போலீசார் மூன்று லட்சம் மதிப்புள்ள ஆறு பைக்குகளையும் பறிமுதல் செய்ததோடு, அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.