விழுப்புரம்:திண்டிவனம் இந்திரா காந்தி பேருந்து நிலையத்தில், போதை ஆசாமி ஒருவர் மதுபோதையில் பேருந்து முன்னால் நின்று பாடிக்கொண்டே நடனமாடி அட்டகாசத்தில் ஈடுபட்டார். இதனை பேருந்திற்காக காத்திருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுபோதையில் பஸ் ஸ்டாண்டில் பிரேக் டான்ஸ் - வைரலாகும் வீடியோ! - திண்டிவனம் பேருந்து நிலையம்
திண்டிவனம் பேருந்து நிலையத்தில் மதுபோதை தலைக்கேறிய நபர் ஒருவர் பிரேக் டான்ஸ் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திண்டிவனம் நகராட்சி பேருந்து நிலையத்தை ஒட்டியவாறு அரசு மதுபான கடை அமைந்துள்ளது. அங்கு மது அருந்திவிட்டு சிலர் போதையில் அடிக்கடி பயணிகளை தொந்தரவு செய்வதாக புகார்கள் உள்ள நிலையில், இந்த போதை ஆசாமி பேருந்து முன்னால் நின்று இடையூறு செய்யும் வகையில் நடனமாடினார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வரும் பலரும் இதுபோன்று பொது இடங்களில் இடையூறு செய்யும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அல்லேரி மலைப்பகுதியில் 4,700 லிட்டா் சாராய ஊறல்கள் அழிப்பு