விழுப்புரம் மாவட்டத்தில் மெச்சத்தகுந்த வகையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை மாதமிருமுறை நேரில் அழைத்துப் பாராட்டி, வெகுமதி வழங்குவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மெச்சத்தகுந்த பணி! காவலர்களுக்கு விழுப்புரம் எஸ்பி பாராட்டு - police
விழுப்புரம்: மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 40 காவலர்களுக்கு விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார்.
அந்தவகையில் கடந்த இரு வாரங்களில் காணாமல் போனவர்களை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தல், அந்நிய மாநில மதுபாட்டில்கள் கடத்தலை தடுத்தல், கஞ்சா பறிமுதல், திருட்டு நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட செயல்களில் சிறப்பாகப் பணியாற்றிய விழுப்புரம், திருக்கோவிலூர், பகண்டை, கிளியனூர், மரக்காணம், வானூர், திருபாலபந்தல், கோட்டகுப்பம் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள், நெடுஞ்சாலை துறை (எண் 4), விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றும் காவலர்கள் 40 பேருக்கு காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளார்.
இந்த நிகழ்வின்போது காவல் துறை தனிப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்.