தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரக்காணத்தில் கனமழை - உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை! - vilupuram district news

விழுப்புரம் : மரக்காணத்தில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக உப்பளம் பாத்திகள் முற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

vilupuram-salt-manufacturers-suffered-for-havey-rain
vilupuram-salt-manufacturers-suffered-for-havey-rain

By

Published : Feb 22, 2021, 10:18 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் நேற்று (பிப்.21) இரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கின.

முன்னதாக பருவ மாற்றம் காரணமாக மழை பெய்ததால் சில தினங்களுக்கு முன் மழைநீர் வடிந்து உப்பு உற்பத்திக்கான வேலை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு முதல் பெய்த மழையால் உப்பளம் பாத்திகள் முற்றிலும் மழைநீரால் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி தடைபட்டுள்ளது.

மேலும் உற்பத்திக்கு தயாரான உப்பு மழை நீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தியாளர் வேதனை அடைந்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதையும் படிங்க: தாய்ப்பால் வங்கியை தொடங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details