தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறுதல் கூறவந்தவர்கள் மீது வழக்குப்பதிவு! - முன்விரோதம் காரணமாக எரித்து கொலை செய்யப்பட்ட ஜெயஸ்ரீ

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே எரித்துக் கொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஊரடங்கு உத்தரவை மீறி ஆறுதல் கூறவந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

vilupuram police filled case more than 50 person for mass gethearing in deceased family
vilupuram police filled case more than 50 person for mass gethearing in deceased family

By

Published : May 16, 2020, 3:21 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மூத்த மகள் ஜெயஶ்ரீ. இவர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் அண்மையில் எரித்துக் கொலைசெய்யப்பட்டார்.

மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், நேரில் சென்று சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தும் நிவாரணத் தொகை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு விதிகளை மீறி கூட்டமாக வந்ததாகவும், பேரிடர் விதிகளை மீறி நோய் பரப்பும்விதத்தில் செயல்பட்டதாகவும் கூறி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க. பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி. சரவணன், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலாளர் அமீர் அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த முஸ்தாக்தீன், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமி ஜெயஸ்ரீ எரித்து கொலை: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details