விழுப்புரத்தில் இன்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா செயத்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவர முயற்சித்தத் திட்டங்களை இன்று அவர்களே எதிர்க்கிறார்கள். ப. சிதம்பரம் அறிவுடையவராக எனக்குத் தெரியவில்லை. அவர், கலவரச் சிந்தனையோடு செயல்படுகிறார்.
தமிழ்நாட்டில் அனுமதியின்றி பலர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இஸ்லாமியர்கள் ஸ்டாலின் போன்ற மண்குதிரையை நம்ப வேண்டாம். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் என்று கூறியுள்ள ஜவஹிருல்லா, 100 கோடி இந்துக்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் என்ன ஆகும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
கலவர சிந்தனையுடையவராக ப.சிதம்பரம் தெரிகிறார் - ஹெச். ராஜா இதனைக் கடந்தாண்டு செங்கோட்டையில் நடந்த விநாயகர் வழிபாடு நிகழ்ச்சியில் நிரூபித்துள்ளோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற 28ஆம் தேதி பாஜக சார்பில் பேரணி நடத்தப்படும்.
ஹெச். ராஜா செய்தியாளர் சந்திப்பு திக, திமுகவினர் இந்து விரோதிகள். அதனால்தான் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். அனைத்து இந்துக்களும் தேசபக்தர்களும் இதனை எதிர்க்கவேண்டும். திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி பட்டியிலின மக்களை கேவலமாகப் பேசியுள்ளார். எனவே, அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: திமுகவின் ஊதாரித்தனம் - அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்!