தமிழ்நாடு

tamil nadu

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் விழுப்புரம் ஆசிரியர்

By

Published : Aug 22, 2020, 7:38 AM IST

விழுப்புரம்: சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப் என்பவர் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்காகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

vilupuram Govt school teacher to receive national awards to teachers
vilupuram Govt school teacher to receive national awards to teachers

ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும்வகையில் அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலுமிருந்து 47 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வுசெய்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டிலிருந்து விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் தில்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்க உள்ளார்.

இதையும் படிங்க... நல்லாசிரியர் விருதிற்கு அரசியல் தொடர்புள்ளவர்களை தேர்வு செய்யக்கூடாது - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details