விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஷார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்ற மூன்று வருடங்கள் முதல் ஐந்து வருடங்கள்வரை பணி அனுபவம் உள்ள 35 வயதுக்குட்பட்ட கார்பெண்டர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 20,000 முதல் 30,000 வரை பணி அனுபவத்துக்கேற்ப வழங்குவதுடன், இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, ஐக்கிய அரபு நாடுகளின் சட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலை அளிப்போரால் வழங்கப்படும்.
மேலும் ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய 25 முதல் 40 வயதுக்குட்பட்ட கொத்தனார், கார்பெண்டர், பிளம்பர், பெயிண்டர், ஐடிஐ எலெக்ட்ரிசியன் ஆகிய பிரிவுகளில் இரண்டு வருட பணி அனுபவம் உள்ளவர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அனுபவத்துக்கு ஏற்ப ஊதியம் வழங்குவதுடன், விசா, ஓமன் நாட்டின் சட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலை அளிப்பவர்களால் வழங்கப்படும்.