தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் பறக்கும் படையினர் பறிமுதல்செய்த 3 லட்சம் ரூபாய் - Vilupuram Crime news

விழுப்புரம்: மரக்காணம் அடுத்த பொம்மையார்பாளையம் அருகே உரிய ஆவணங்களின்றி, இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற மூன்று லட்சம் ரூபாயைப் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

பறக்கும் படையினர்
பறக்கும் படையினர்

By

Published : Mar 4, 2021, 5:09 PM IST

பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் மிகத் தீவிரமாக சோதனை நடத்தி ஆவணங்களின்றி கொண்டுசெல்லும் பணம், விலை மதிப்புள்ள பொருள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துவருகின்றனர்.

பரபரக்கும் பறக்கும் படை

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

இதைத்தொடர்ந்து, வானூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பறக்கும் படை அலுவலர்கள் முருகன் தலைமையிலான குழு கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள பொம்மையார்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, குயிலாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் வீடு கட்டுவதற்கு பொருள்கள் வாங்குவதற்காக இரண்டு லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, புதுச்சேரி நோக்கிச் செல்லும்போது தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்.

தொடர் வாகன சோதனை

தொடர்ந்து அதே பகுதியில் வாகன சோதனையில் புதுச்சேரி ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சம் ரூபாயை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்து, அவரிடம் அலுவலர்கள் கேட்டபோது வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துவருவதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும் அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது, கடந்த வாரம் 50 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். அதன்பிறகு எவ்வித பரிவர்த்தனையும் இல்லை எனத் தெரியவந்ததையடுத்து, உரிய ஆவணம் இல்லாததால் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டு, வானூர் வட்டாட்சியர் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details