கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டடத்தை உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் இரா. குமரகுரு திறந்துவைத்தார்.
உளுந்தூர்பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டடம் திறந்துவைப்பு! - விழுப்புரம் உளுந்தூர்பேட்டை பொங்கல் பரிசு
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு திறந்துவைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கினார்.
பின்னர் தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு வழங்கப்பட்ட ரூ.10 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். அப்போது பேசுகையில் “உளுந்தூர்பேட்டையை சிறந்த பேரூராட்சியாக மாற்றுவதற்கு முயற்சி செய்துவருகிறேன்.
இதன் காரணமாக பல கோடி மதிப்பில் சாலை வசதி, தண்ணீர் பிரச்னை, பாதாளச் சாக்கடை உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் திருப்பதி தேவஸ்தானம் அதிலிருந்து உளுந்தூர்பேட்டையில் திருப்பதி கோயில் கட்டுவதற்கு 17ஆம் தேதி அன்றுகுழு வருகை தர உள்ளது” என்றார்.