இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., "வருகிற 20ஆம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறக்கப்படவுள்ளது. அதைத்தொடர்ந்து, கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
இந்த இருநிகழ்ச்சிகளிலும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இதற்காக 20ஆம் தேதி மாலை 3 மணியளவில் விழுப்புரத்துக்கு வருகை தரும் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான பேரங்கியூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.