தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேலும் 6 காவலர்களுக்கு கரோனா: செஞ்சி காவல் நிலையம் மூடல் - விழுப்புரம் மாவட்ட செய்தி

விழுப்புரம்: செஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் மேலும் ஆறு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அக்காவல் நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

செஞ்சி காவல் நிலையம் மூடல்
செஞ்சி காவல் நிலையம் மூடல்

By

Published : Jul 20, 2020, 4:12 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், செஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள்பட மூன்று காவலர்களுக்கும், எழுத்தர் ஒருவருக்கும் கரோனா தொற்று (ஜூலை 17) உறுதிசெய்யப்பட்டது.

தற்போது, செஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள், தட்டச்சு செய்யும் ஒருவர் உள்ளிட்ட 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக செஞ்சி காவல் நிலையம் இன்று (ஜூலை 20) தற்காலிகமாக மூடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details