விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அத்தண்டமருதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமதாஸ் (52). இவர் இன்று காலை தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பணி செய்துகொண்டிருந்தார்.
நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் அறுந்துகிடந்த மின்கம்பியைத் தெரியாமல் மிதித்துள்ளார். இதனையடுத்து அவரது உடலில் அதிகமான அளவில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.