விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை அடுத்துள்ள கீழ்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிஉந்த நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பாக சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டு திருடர்களிடம் 30 சவரன் நகை பறிமுதல் - போலீசார் அதிரடி! - theft
விழுப்புரம்: சின்னசேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களிடம் இருந்து 30 சவரன் நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி குற்றப்பிரிவு காவல்துறையினருடன் சேர்ந்து வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், சின்னசேலம் அருகே விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சின்ராசு, செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் பவுன் காசுகள், மோதிரம், கேமரா, வாட்ச்கள் உட்பட சுமார் 13 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததுடன், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.