தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவனை கத்தியால் குத்திவிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை.. விழுப்புரத்தில் நடந்தது என்ன? - villupuram sp srinatha

விழுப்புரம் அருகே காதலனை கத்தியால் குத்திவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 27, 2023, 4:28 PM IST

விழுப்புரம்:விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு ஏரிக்கரையில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த மூவர் சிறுவனை கத்தியால் தலை மற்றும் கை பகுதியில் வெட்டிவிட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவர்களின் செல்போன் மற்றும் வெள்ளி நகையை திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா கூறியதாவது, "8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. கும்பலில் ஒரு நபர் மட்டும் சிறுமியை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றார். பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து புகார் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி கூட்டுப் பலாத்காரம் நடைபெற்றதாக எந்தவித தகவல்கள் இல்லை" என்று கூறினார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக 8 இடங்களில் விசாரணை நடத்தி வரும் போலீசார் திங்கட்கிழமை மூன்று பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: டம்மி துப்பாக்கியுடன் திருநங்கையிடம் சில்மிஷம்.. யூடியூபர்ஸ் கைது!

ABOUT THE AUTHOR

...view details