தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: விறுவிறுப்படையும் விழுப்புரம் - collector ila.ganesan announncement,

விழுப்புரம்: உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுவருவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

panchayat election vote list

By

Published : Oct 4, 2019, 12:11 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 10 ஆயிரத்து 223 பொறுப்புகளுக்கு நேரடியாகவும் ஆயிரத்து 163 பொறுப்புகளுக்கு மறைமுகமாகவும் தேர்தல் நடத்த சிறப்பான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ஊரகப் பகுதிகளில் நான்காயிரத்து 741 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சிப் பகுதிகளில் 284, நகராட்சிப் பகுதிகளில் 225 வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையும் பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு முறையும் பின்பற்றப்படுகிறது. இதற்காக மூன்றாயிரத்து 750 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

ஊரகப் பகுதிகளில் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்கள் மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியபின் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

வாக்காளர் பட்டியலை வெளியிடும் விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 27 லட்சத்து 54 ஆயிரத்து 263 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 77 ஆயிரத்து 292 ஆகும். பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 76 ஆயிரத்து 570, மூன்றாம் பாலினத்தவர் 411 உள்ளனர். நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலே உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த வாக்காளர் பட்டியல் அனைத்தும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை வழங்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details