தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு தேடி வரும் கரோனா நிவாரணம்! - covid 19 relief amount

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணத் தொகை அவர்களது இருப்பிடத்துக்கே வந்து வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

வீடுதேடி வரும் கரோனா நிவாரணம்!
வீடுதேடி வரும் கரோனா நிவாரணம்!

By

Published : Jul 3, 2020, 6:37 AM IST

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கரோனா நிவாரணத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளின் அவரவர் இருப்பிடத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொகையானது அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும். தற்போது கணினியில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தேசிய அடையாள அட்டை பெற்று இருக்கும் அனைவரின் பதிவுகள் பதிவு செய்யப்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும். எனவே, தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகை ரூ. 1000 தங்கள் இருப்பிடத்துக்கே வந்து வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details