தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் வீட்டு முன்பு கோலம் போட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு! - Viluppuram color palette For NRC Protest

விழுப்புரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வீட்டு வாசலில் கோலம் வரையப்பட்டு வாசகம் எழுதப்பட்டிருந்தது.

Draw the color palette For NRC Protest
Draw the color palette For NRC Protest

By

Published : Jan 1, 2020, 4:45 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுகவின் முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகள் வீட்டு வாசலில் கோலம் வரைந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக விழுப்புரத்தில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வண்ண கோலங்கள் வரையப்பட்டிருந்தன.

மேலும் அதனருகில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதேபோல், விழுப்புரத்தில் உள்ள விசிக அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சு.ஆற்றலரசு தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோலமிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:

திருமாவளவன் கோலம் போட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details