விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதும், புகாா் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யைத் தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இவர்கள் இருவர் மீதும் கடந்த ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று(ஜன.24) விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. முன்னாள் எஸ்.பி. நீதிமன்றத்தில் ஆஜரானாா்.