விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை, 1959ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 32 அடி உயரம் கொண்ட இந்த அணையானது, 605 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கக்கூடிய அளவில் கட்டப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழை காரணமாக இந்த அணை அதன் முழு உயரமான 32 அடியை எட்டியது.
இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை சார்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், நள்ளிரவு 12.50 மணி அளவில் மூன்று மதகுகள் வழியாக 200 கனஅடி வீதம் 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு மூன்று மதகுகளிலும் 1,200 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.