கடந்த 2012ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல்நிலைய எல்லைக்குட்டப்ட்ட கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண், அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதேபோல், 2014ஆம் ஆண்டு சொலம்பட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த இரு வழக்கிலும் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய விழுப்புரத்தைச் சேர்ந்த வடிவேல், மதியழகன், இளையராஜா, பாலமுருகன் மற்றும் குருபாலன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!