தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் உதவி நிராகரிப்பால் இளைஞர் நூதனப் போராட்டம்! - தாட்கோ கடன் உதவி

விழுப்புரம்: கடன் உதவி நிராகரிக்கப்பட்ட காரணத்தால் இளைஞர் ஒருவர் கண்ணில் கறுப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

protest
protest

By

Published : Jul 9, 2020, 12:03 AM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள இறையானூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தன். பட்டதாரி இளைஞரான இவர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாட்கோ அலுவலகத்தில் கடன் உதவி கேட்டு விண்ணப்பத்திருந்தார்.

இளைஞர் நூதனப் போராட்டம்!

இவரது விண்ணப்பம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் நிராகரிப்பட்டு வருகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் நேற்று (ஜூலை8) தனது கண்ணிலும் வாயிலும் கறுப்பு துணி கட்டிக்கொண்டு, கையில் பதாகையுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அவரை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

காவல்துறையினர் முன்பு நூதனப் போராட்டம்

இதையும் படிங்க:இருசக்கர வாகனத்திற்கு இறுதிச் சடங்கு : புதுக்கோட்டையில் நூதனப் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details