தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கு - விழுப்புரத்தில் வெறிச்சோடிய சாலைகள் - Villupuram sunday lockdown

விழுப்புரம்: மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

விழுப்புரத்தில் வெறிச்சோடிய சாலைகள்
விழுப்புரத்தில் வெறிச்சோடிய சாலைகள்

By

Published : Jul 19, 2020, 3:23 PM IST

தமிழ்நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி கடந்த இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது ஞாயிறான இன்றும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து விழுப்புரம் நகரில் உள்ள புதுச்சேரி சாலை, திருச்சி சாலை, சென்னை சாலை, நேருஜி வீதி, திரு.வி.க வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றியும், கடைகள் அனைத்தும் மூடப்பட்டும் வெறிச்சோடி காணப்படுகிறது.

விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details