விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிப்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் அன்பழகன்(40). இவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உதவி ஆய்வாளருக்கு கரோனா: கண்டாச்சிப்புரம் காவல் நிலையம் மூடல் - விழுப்புரம் உதவி ஆய்வாளருக்கு கரோனா!
விழுப்புரம்: கண்டாச்சிப்புரம் காவல் உதவி ஆய்வாளருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளருக்கு கரோனா! காவல் நிலையம் மூடல்
கண்டாச்சிப்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் உள்பட 18 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலையம் உடனடியாக மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.