தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையில் புதிதாக சேர்ந்த மோப்பநாய்க்கு மாவட்ட எஸ்பி பெயர் சூட்டினார்! - villupuram news

விழுப்புரம்: சிறப்பாக பணியாற்றிய 29 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

மோப்பநாய்
மோப்பநாய்

By

Published : Mar 4, 2020, 3:57 PM IST

விழுப்புரத்தில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களை மாதம் இருமுறை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்குவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், கடந்த இரு வாரங்களில் தவறவிட்ட பொருட்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தல், கோயில் திருவிழாக்களில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், கொலை குற்றவாளிகளை கைது செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் சிறப்பாக பணியாற்றிய விக்கிரவாண்டி, வளத்தி, கோட்டக்குப்பம், அவலூர்பேட்டை, கண்டாச்சிபுரம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் பணியாற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என மொத்தம் 29 பேரை மாவட்ட எஸ்.பி ஜெயகுமார் நேரில் அழைத்து பாராட்டி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்

காவல் துறையில் புதிதாக சேர்ந்த மோப்பநாய்க்கு மாவட்ட எஸ்பி பெயர் சூட்டினார்

இதைத் தொடர்ந்து அவர், காவல் துறையில் புதிதாக வெடிபொருள்கள் கண்டுபிடிக்கும் பணிக்கு வழங்கப்பட்ட மோப்பநாய்க்கு 'ராணி' என பெயர் சூட்டினார்.

இதையும் படிங்க:கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details