தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் - Villupuram Latest News

விழுப்புரம் : நீட் தேர்வு மரணத்துக்கு நீதி கேட்டு பெண் விடுதலை கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (செப்.24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Villupuram protest against  For Neet exam
Villupuram protest against For Neet exam

By

Published : Sep 24, 2020, 9:30 PM IST

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான தற்கொலைக்களுக்கு நீதி கேட்டு பெண் விடுதலை கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (செப்.24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆசிரியர் சபரிமாலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details