தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் தற்கொலை : 3 பேர் பணியிடை நீக்கம் - villupuram Police suicide case

விழுப்புரம்: மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவலர் தற்கொலை! 3 பேர் பணியிடை நீக்கம்
காவலர் தற்கொலை! 3 பேர் பணியிடை நீக்கம்

By

Published : Aug 27, 2020, 11:33 AM IST

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் விழுப்புரம் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விழுப்புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர், கடந்த 17ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த, இந்தச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி வந்தார்.

இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் பாலமுருகன், ஞானசேகரன், காவலர் ராஜசேகர் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிமுறைகள்! - அரசாணையாக வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details