தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் 105 லிட்டர் கள்ளச்சாராயம் கேன்கள் பறிமுதல்! - villupuram illicit liquor seized

விழுப்புரம்: பெரிய காலனி பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக விற்கப்பட்டு வந்த 105 லிட்டர் சாராய கேன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

arrest
arrest

By

Published : Sep 1, 2020, 10:08 PM IST

விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக மாவட்ட மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ரேணுகாதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் இன்று (செப்.1) காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.

கள்ளச்சாராயம் கேன்களுடன் இருசக்கர வாகனம் பறிமுதல்
அப்போது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று கேன்களில் 105 லிட்டர் எரிசாராயத்துடன் 40 லிட்டர் பாக்கெட்டுகள் சாராயம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த விஜய் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை: சிறுவன் உள்பட 3 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details