தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியின்றி கிராம சபை: திமுகவினர் மீது வழக்கு..! - Villupuram police

விழுப்புரம்: மாவட்டத்தில் அனுமதியின்றி கிராம சபை கூட்டம் நடத்தியதாக திமுகவினர் 60 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனுமதியின்றி கிராம சபை: திமுகவினர் மீது வழக்கு..!
அனுமதியின்றி கிராம சபை: திமுகவினர் மீது வழக்கு..!

By

Published : Oct 3, 2020, 11:26 AM IST

கரோனா வைரஸ் காரணமாகவும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டும் தமிழ்நாடு முழுவதும் நேற்று (அக். 2) நடைபெற இருத்த கிராம சபை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கிடையில் விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுந்தரிப்பாளையம் கிராமத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி தலைமையில் நேற்று (அக். 2) கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் அனுமதியின்றி கிராம சபை கூட்டம் நடத்தியதாக திமுக மத்திய மாவட்ட செயலாளர் நா. புகழேந்தி உள்ளிட்ட 60 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க...காவல் துறை உதவியோடு களைகட்டிய மது விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details