விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரின் உத்தரவுப்படி மணல் கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மரகதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (39) என்பவர் மீது உள்ள ஒன்பது மணல் கடத்தல் வழக்குகளில், பலமுறை சிறைவாசம் அனுபவித்த போதிலும், தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த குற்றத்துக்காக குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ரமேஷ், மீண்டும் மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதால் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஜானகிபுரம் சந்திப்பு அருகே இவர் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.