தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து வறட்சியான வானிலையே நிலவுவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெரியசேவலை பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் இன்று அப்பகுதி மக்கள் கடலூர் - திருக்கோவிலூர் சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குடிநீர் கேட்டு பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களைத் தொடர்பு கொண்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் குடிநீர் பற்றாக்குறை : பொதுமக்கள் சாலை மறியல் - விழுப்புரத்தில் குடிநீர் பற்றாக்குறை
விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
protest