விழுப்புரம்: பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்கும் பொருட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் உள்ள 688 ஊராட்சிகளில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் தொடர்ச்சியாக 13 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 3,689 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் 7,562 சிறிய மின் விசை நீர் தேக்க தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று(டிச.30) மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஒரே நாளில் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. முன்னாகவே மக்கள் தேவையான குடிநீரை சேமித்துக்கொள்ள அறிவிப்பு வழங்கப்பட்டது. இந்த பராமரிப்பு பணியை பார்வையிட்டு மேற்பார்வையிட ஒன்றிய அளவில் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையின் மூலமாக நியமிக்கப்பட்டனர்.