தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாறைகள் வெடித்து சிதறியதில் தொழிலாளி உயிரிழப்பு - விழுப்புரம் க்ரைம் செய்திகள்

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே கல் குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

villupuram-one-worker-dead-in-vikravandi-quarry
பாறைகள் வெடித்து சிதறியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

By

Published : Feb 21, 2020, 10:16 AM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள முட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் மகன் ராமகிருஷ்ணன் (45). இவர் செ.புதூர் கிராமத்தில் இயங்கி வரும் மதுரையைச் சேர்ந்த அன்புசெல்வன் என்பவருக்குச் சொந்தமான கல் குவாரியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 20) காலை வழக்கம்போல் பணிக்குச் சென்ற ராமகிருஷ்ணன், பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது பாறை வெடித்து சிதறி, ராமகிருஷ்ணனின் தலையில் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் வந்து தீர்வு காணும் வரை சடலத்தை எடுக்க விடமாட்டோம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பெரியதச்சூர் காவல் துறையினர், அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன ராமகிருஷ்ணனுக்கு விஜயா என்ற மனைவியும், பாலு என்கிற மகன், ராஜேஸ்வரி, வைத்தீஸ்வரி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இதையும் படிங்க:ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற நான்கு பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details