தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் இளைஞர் கொலை: 7 பேர் கைது - Villupuram Murder

விழுப்புரம்: செஞ்சி அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

villupuram-murder-case-7-people-arrested-by-police
villupuram-murder-case-7-people-arrested-by-police

By

Published : Feb 14, 2020, 10:50 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த புதன்கிழமை செ.புதூர் என்ற இடத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், தவறான புரிதலால் அப்பகுதி மக்கள் அவரை தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சக்திவேலின் உடலைக் கைபற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். உடற்கூறாய்வுக்குப்பின் சக்திவேல் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இளைஞர் சக்திவேலின் உறவினர்

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சக்திவேல் இறப்புக்கு காரணமான 3 பெண்கள் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர், இவர்கள் அனைவரும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை கடலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'இளைஞரை அடித்துக் கொன்ற கிராமத்தினர்' - இயற்கை உபாதை கழிக்கச்சென்ற இடத்தில் நடந்த சாதியக் கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details