தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்துணவு ஊழியர்கள் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - villupuram mid day meal staff protest

விழுப்புரம்: ஓய்வு ஊதியம் உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

mid-day-meal-staff-protest

By

Published : Nov 12, 2019, 9:54 PM IST


வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் பணிக்கொடை என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் முதலமைச்சர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வு ஊதியம் குறைந்தபட்சம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சத்துணவு ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க: ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details