நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேல்மலையனூர் கோயில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை! - விழுப்புரம் மேல்மலையனூர் கோயில்
விழுப்புரம்: பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
villupuram-melmalayanur-temple
இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் இன்று முதல் வருகிற 31ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோயிலுக்குச் செல்வதற்காக பேருந்து வசதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: முகக்கவசம், வென்ட்டிலேட்டர்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை