தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலராக நாடகமாடி 1.50 லட்சம் மோசடி செய்த நபர்! - விழுப்புரம்

விழுப்புரம் : காவல் துறையில் பணிபுரிவதாக நாடகமாடி, கூலித் தொழிலாளி ஒருவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

villupuram pattta scam
villupuram pattta scam

By

Published : Jun 21, 2020, 12:14 PM IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஈச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). இவர், மாவட்டக் மாவட்டக் காவல் துறை உயர் அலுவலரின் ஓட்டுநராக பணிபுரிவதாக, அத்தியூர் திருக்கை பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளியிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, பட்டா மாற்றம் செய்து தருவதாகக் கூறி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று, பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ராஜேஷ் பெற்றுத் தந்த பட்டா போலியானது எனத் தெரிய வந்ததை அடுத்து, இது குறித்து விழுப்புரம் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் முருகன் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், ராஜேஷை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து காவல் துறை சீருடை, போலி அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க : டிவிஎஸ் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கரோனாவால் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details