தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருந்தி வாழ விரும்புகிறோம்: லாட்டரி விற்பனையாளர்கள் மனு... - விழுப்புரம் மாவட்டச் செய்திகள்

விழுப்புரம்: லாட்டரி விற்பனையாளர்கள் ஆறு பேர் திருந்தி வாழ விரும்புவதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

villupuram
villupuram

By

Published : Jan 24, 2020, 8:57 PM IST

கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரைச் சேர்ந்த அருண் என்பவர் லாட்டரி மோகத்தால் அதிக கடனுக்குள்ளாகி மனமுடைந்து மனைவி சிவகாமி, குழந்தைகள் பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி ஆகிய பெண் குழந்தைகளுடன் சயனைடு குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

லாட்டரியால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதில் பல பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
இந்நிலையில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்த விழுப்புரத்தைச் சேர்ந்த மணவாளன், கோபிநாத், லோகநாதன், கண்ணன், முருகேசன், மூர்த்தி ஆகிய ஆறு பேரும் தாங்கள் மனம் திருந்தி வாழ விரும்புவதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: கொடைக்கான‌லில் க‌ளைக‌ட்டும் போலி லாட்ட‌ரி சீட்டு விற்ப‌னை...

ABOUT THE AUTHOR

...view details